யாழ். வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
யாழ் - காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.

யாழ் - காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.
நேற்று (16) பகல் 3.30 மணியளவில் பட்டா ரக வாகனமும் சைக்கிளும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டது.
மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டா வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.