மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
பொத்துவில் வைத்தியசாலையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்து இன்று மதியம் 12.25 தொடக்கம் 12.45 வரை குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் வைத்தியசாலையின் அத்தியட்சகரால் அங்கு பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களது கடமை நேரம் உட்பட பல விடயங்கள் தொடர்பாக இடையூறு விளைவிக்கப்படுவதாக தெரிவித்து அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.