சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பில் வெளியான அறிவித்தல்!

சிவனொளிபாத மலை பருவ காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

நவம்பர் 22, 2022 - 14:22
சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பில் வெளியான அறிவித்தல்!

சிவனொளிபாத மலை பருவ காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

“எதிர்வரும் 6ஆம் திகதி காலை இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து மூன்று வழிகளில் சுவாமிகள் சிவனடி பாத மலைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து உள்ளது.

 7ஆம் திகதி அதிகாலை பிரித் ஓதும் வைபவம் நடைபெறும் அதன் பின்னர் 2022 /2023 சிவனடி பாதமலை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு மே மாதம் வைகாசி விசாகம் பௌர்ணமி தினத்துடன் நிறைவு பெறும்.

இக் காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் பாதசாரிகள் சிவனொளிபாத மலைக்கு வந்து தரிசனம் செய்ய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்துள்ளனர். 

மேலும், பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வசதி, வர்த்தக நிலையங்கள் சுகாதார வசதிகள் மற்றும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் உள்ளது.

யாத்திரிகர்கள் தரிசனம் செய்ய வரும்போது பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் (முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது) இவற்றை எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!