சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி தொடர்பில் விசாரணை

குறித்த சிறுமி இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பல சந்தர்ப்பங்களில் காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி தொடர்பில் விசாரணை
ADVERTISEMENT
ADVERTISEMENT

பசறை பொலிஸ் பிரிவின் உடகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சுகவீனம் காரணமாக பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுமி நேற்று (09) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியை பரிசோதித்த பசறை மருத்துவமனையின் மருத்துவர் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் உடகம, பசறை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஆவார். குறித்த சிறுமி இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பல சந்தர்ப்பங்களில் காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், சிறுமியைப் பரிசோதித்த பசறை மருத்துவமனையின் மருத்துவர், அவரது உடலில் காயங்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார், எனவே இந்த மரணம் சந்தேகத்திற்கிடமான மரணமாக பார்க்கப்படுகினறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பசறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT