'கட்சியை விட நாட்டுக்காவே ரணில் உழைக்கின்றார்'

நாவலப்பிட்டி தொகுதியின் வெலிகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியுள்ளார்.

டிசம்பர் 5, 2022 - 17:56
'கட்சியை விட நாட்டுக்காவே ரணில் உழைக்கின்றார்'

நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டி தொகுதியின் வெலிகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை முன்னேற்றவோ, அக்கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிக்கவோ செயற்படாமல் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 2½ வருடங்களில் நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த தற்போதைய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!