ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக பணியாற்றிய ஈ. குஷானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக பணியாற்றிய ஈ. குஷானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று (29) அதிகாலை 3.57 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஓமானுக்கு வேலைக்குச் சென்ற பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தமை மற்றும் ஆட்கடத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.