இலங்கை வந்தடைந்த உலகின் ஆபத்தான பறவைகள்!

'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை, சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும். அத்துடன், சுமார் 60 கிலோகிராம் எடை கொண்டது.

ஜுலை 7, 2023 - 13:44
இலங்கை வந்தடைந்த உலகின் ஆபத்தான பறவைகள்!

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு  அவை கொண்டு வரப்பட்டுள்ளன.

'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை, சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும். அத்துடன், சுமார் 60 கிலோகிராம் எடை கொண்டது.

இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையும் தெகிவளையில் உள்ள தேசிய மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குரங்குகள், காட்டுப் பறவைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளையும் இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!