இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள்

சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவம்பர் 20, 2022 - 17:34
இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள்

சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை, அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஊருபொக்க கடவலகம பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மிகையானதை அடுத்து, இறந்தவரின் மனைவியின் முந்தைய திருமணத்தைச் சேர்ந்த மகன் உட்பட பலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 51 வயதுடைய பெரலபனதர கடவலகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 32, 30 மற்றும் 19 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!