இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுதா? அப்பவே எவ்ளோ அழகு!
தென்னிந்திய சினிமாவில் 20 வருடத்திற்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் ஒரு மிஸ் சென்னை ஆவார். முதலில் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கிய இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

திரிஷா
சமீப காலமாக சினிமா திரைப் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த ஒரு பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான்.
தென்னிந்திய சினிமாவில் 20 வருடத்திற்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் ஒரு மிஸ் சென்னை ஆவார். முதலில் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கிய இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார்.
இடையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்திருக்கின்றார்.
விஜய்யின் லியோ திரைப்படத்திலும், அதைத் தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் இவர் நடிக்க போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் திரிஷாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.