இணையத்தில் ஜெயிலர் "HD ப்ரிண்ட்" லீக் - அதிர்ச்சியில் படக்குழு!
Jailer HD Available For Free Download Online: ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படம், ரிலீசான சிறிது நாட்களிலேயே ஹெச்.டி. வடிவில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது.
இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், ஜெயிலர் திரைப்படம் இதுவரை ஒ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை.
ஜெயிலர் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் தளங்களில் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ஹெச்.டி. ப்ரின்ட் (அதிக தரமுள்ள) இணையத்தில் கசிந்துள்ளது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படம், ரிலீசான சிறிது நாட்களிலேயே ஹெச்.டி. வடிவில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.