நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை! 

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தையொன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

Dec 18, 2022 - 07:31
நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை! 

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தையொன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

இவ்வாறு பிறந்த குழந்தையின் இரு கால்கள் செயலற்று இருப்பதாகவும், அக்கால்களை அகற்றுவது தொடர்பில் வைத்தியர்கள் பரிசோதித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதுடன்,குழந்தை 4 கால்களுடன் பிறந்தது மருத்துவ அறிவியலில், இஸ்கியோபகஸ் என்று அழைக்கப்படுகின்றது.

கரு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும் போது, உடல் பாகங்கள் இரண்டு இடங்களில் வளரும். இந்த பெண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியில் கூடுதல் இரண்டு கால்களுடன் வளர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும், கால்கள் செயலற்ற நிலையில் உள்ளதாகவும், உடல் உறுப்புகளில் வேறு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது தொடர்பில் குழந்தைகள் நல பிரிவு வைத்தியர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.

குறித்த பரிசோதனைக்கு பிறகு குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், செயலற்ற இரண்டு கால்களும் அகற்றப்படும் எனவும் கூறப்படுகின்றது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்