இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் நிகழ்வுகள் இரத்து
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையும் இதற்கும் ஒரு காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இந்த வருடத்துக்கான தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை இடம்பெறாது என கட்சியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தைபொங்கல் நிகழ்விற்காக செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ள பணத்தொகையை மலையக மக்களின் நிவாரண திட்டத்துக்கும், மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பயன்படுத்தபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையும் இதற்கும் ஒரு காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.