கிறிஸ்மஸ் பரிசுக்காக தனது சொந்த சகோதரியை சுட்டுக் கொலை செய்த சிறுவன்

இந்த சம்பவத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் 28, 2023 - 11:31
கிறிஸ்மஸ் பரிசுக்காக தனது சொந்த சகோதரியை சுட்டுக் கொலை செய்த சிறுவன்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தனது உடன்பிறந்த சகோதரியை 14 வயதுடைய சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14,15 வயதுடைய இரு சகோதரர்களிடையே கிறிஸ்மஸ் பரிசு தொடர்பான வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 14 வயதுடைய சிறுவன் ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கியை எடுத்து அதை தன் சகோதரனை நோக்கி, தலையில் சுடப் போவதாகக் கூறியுள்ளார்.

இதைக்கண்ட அவரது மூத்த சகோதரி, தனது சகோதரனை வீட்டை விட்டு வெளியேறுமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து 14 வயது சிறுவன் தனது சகோதரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியுள்ளார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட இளம்பெண்ணை அவர்களது குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு காரணமான 14 வயதுடைய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!