இலட்சங்களில் விலைபோகும் ஒரு பாட்டில் குடிநீர்... எவ்வளவு தெரியுமா?
இந்த நீர் மிக மிகத் தூய்மையானது என்பதுடன், ரொம்ப ஆடம்பரமான பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு வருகிறது.

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் குடிநீராக, ஜப்பானில் தயாரிக்கப்படும் 'பிலிகோ ஜூவல்லரி வாட்டர்' உள்ளதுடன், இதன் ஒரு லிட்டர் விலை, ஆயிரத்து 390 டொலராகும்.
இந்த நீர் மிக மிகத் தூய்மையானது என்பதுடன், ரொம்ப ஆடம்பரமான பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த பாட்டில்கள், விலை உயர்ந்த ஸ்வரோவ்ஸ்கி கற்களால் ஆபரணம் போல வடிவமைக்கப்படுகின்றன.
தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட, உன்னிப்பாக கவனத்துடன் செய்யப்பட்ட கைவினைப்பொருளாக இந்த பாட்டில் உருவாக்கப்படுகிறது.
இதில் நிரப்பப்படும் நீர், ஜப்பானின் கோபேயில் உள்ள இயற்கை நீரூற்றில் இருந்து பெறப்படுகிறது. இந்த தண்ணீர், மிக உயர்தரமானதாக கருப்படுகிறது.
ஆடம்பரத்தை விரும்புவோர், அதற்காக தயங்காமல் பணத்தை அள்ளிவிடத் தயாராக இருப்போரை இந்த தண்ணீருடன், இதன் ஆடம்பர பாட்டில் அலங்காரமும் கவர்கிறது.