உலக பழங்குடி மக்கள் தினம் இன்று
தம்பன கொடபாகினிய என்ற பூர்வீகக் கிராமத்தை மையமாக வைத்து இலங்கையின் பழங்குடியின மக்களும் இன்று இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

உலக பழங்குடி மக்கள் தினம் இன்று (09) அனுஷ்டிக்கப்படுகிறது.
உலக பழங்குடியின மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.
பூர்வீகக் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் பழங்குடி இளைஞர்களை பிரதிநிதிகளாக அடையாளம் காண்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.
தம்பன கொடபாகினிய என்ற பூர்வீகக் கிராமத்தை மையமாக வைத்து இலங்கையின் பழங்குடியின மக்களும் இன்று இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இதில் இணைந்துகொள்ள உள்ளார்.
ஆதிவாசிகள் தின கொண்டாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆதிவாசிகளின் தலைவர், நாடு முழுவதிலும் உள்ள ஆதிவாசி கிராமங்களின் தலைவர்களின் சபையில் கலந்துரையாடப்பட்ட தமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான மகஜர் ஒன்று அமைச்சரிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.