எறும்புகளுடன் வாழ முடியாது என தனது உயிரை மாய்த்த பெண்

பொதுவாக எறும்புகள் மீதான பயம் சிறு வயது முதல் கசப்பான அனுபவத்தால் ஏற்படலாம். எறும்புகளைக் காணும்போது அவர்களின் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம்.

நவம்பர் 10, 2025 - 16:11
எறும்புகளுடன் வாழ முடியாது என தனது உயிரை மாய்த்த பெண்

இந்தியா - தெலங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர், தன்னால் எறும்புகளுடன் வாழ முடியாது என தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 

அவர் எறும்புகளுக்கு அஞ்சி அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது. குறித்த 25 வயதுப் பெண்ணுக்கு, myrmecophobia எனும் எறும்பு மீதான பயம் சிறு வயது முதலே இருந்ததாகக் கூறப்படுகிறது. 

அதற்காக அவர் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (4 நவம்பர்), பெண் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அவர் எறும்புகளைக் கண்டதாக நம்பப்படுகிறது.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார். 

2022இல் திருமணமான அப்பெண், தமது கணவருக்கும் 3 வயது மகளுக்கும் ஒரு கடிதத்தை எழுதினார். அதில் "என்னை மன்னித்துவிடுங்கள். எறும்புகளுடன் என்னால் வாழமுடியாது. மகளைப் பார்த்துகொள்ளுங்கள்," என்று எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பொதுவாக எறும்புகள் மீதான பயம் சிறு வயது முதல் கசப்பான அனுபவத்தால் ஏற்படலாம். எறும்புகளைக் காணும்போது அவர்களின் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம். அவர்கள் மூச்சுவிடச் சிரமப்படலாம். எனவே, அப் பயத்திலிருந்து விடுபட மருத்துவ ஆலோசனை பெறுவதும் எறும்புகளைப் பார்க்கப் பழகிக்கொள்வதும் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!