கழுதைப்பாலில் Cheese தயாரிக்கும் முயற்சி இலங்கையில் கைகூடுமா?

தங்கள் அழகை மேம்படுத்த கிளியோபாட்ரா போன்ற அழகிகள், கழுதைப்பாலை பயன்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜுன் 20, 2024 - 12:37
கழுதைப்பாலில் Cheese தயாரிக்கும் முயற்சி இலங்கையில் கைகூடுமா?

இலங்கையில் கழுதைப்பாலில் இருந்து Cheese தயாரிக்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கான சாத்தியக்கூடுகள் குறித்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் ஆகிய இணைந்து ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன.

ஆரம்ப ஆய்வுகள்

இந்த ஆய்வுக்காக மன்னாரில் இருந்து ஆண் கழுதைகள் மூன்று, பெண் கழுதைகள் மூன்று மற்றும் கழுதைக்குட்டி ஒன்று பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி அசோக தங்கொல்ல தெரிவித்தார். 

கழுதைப்பாலின் ஊட்டச்சத்து தாய்ப்பாலுக்கு நிகரானது என்றும் அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் Cheeseக்கு உலகில் அதிக தேவை உள்ளது என்றும் சிரேஷ்ட பேராசிரியர் தெரிவித்தார். 

கழுதைப்பாலை பயன்படுத்திய கிளியோபாட்ரா 

தங்கள் அழகை மேம்படுத்த கிளியோபாட்ரா போன்ற அழகிகள், கழுதைப்பாலை பயன்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த பாலை அடிப்படையாகக் கொண்டு, வாதநோய்களை தடுக்கும் தைலங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!