நாடளாவிய ரீதியில் பொலிஸார் தயார் நிலையில்
அனைத்து பிரஜைகளும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை ஆதரித்தால், அடுத்த சில நாட்களில் நாட்டில் அமைதியான சூழல் ஏற்படும்.

அனைத்து பிரஜைகளும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை ஆதரித்தால், அடுத்த சில நாட்களில் நாட்டில் அமைதியான சூழல் ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட அவர், இந்தத் தேர்தல் காலத்தில் முழு அளவிலான தேர்தல் வன்முறைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களை பாதுகாப்பதற்காக 63,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 241 கலவர எதிர்ப்பு குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் நிஹால் தல்துவ கூறினார்.
மேலும், முப்படையைச் சேர்ந்த 11,000 பேர் தயார் நிலையில் உள்ளதாகவும், ஏதேனும் தேவை ஏற்பட்டால் அவர்களை அழைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுமார் 3,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 13,000 அதிகாரிகளின் ஆதரவுடன் நடமாடும் ரோந்துப் பணிகளுக்காக வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்