உலகின் விலையுயர்ந்த சுற்றுலா விசா: சுற்றுலாப் பயணிகளை அசர வைக்கும் கட்டணம்

ஆனால் பூடானுக்கான பயணத்தில், விமானக் கட்டணம் தடுப்பினாலும், நாட்டுக்குள் நுழைவதற்கான கட்டணமே பயணச் செலவில் மிகப் பெரும் இடத்தை பிடிக்கிறது.

நவம்பர் 17, 2025 - 04:46
உலகின் விலையுயர்ந்த சுற்றுலா விசா: சுற்றுலாப் பயணிகளை அசர வைக்கும் கட்டணம்

உலகின் பல நாடுகள் இன்றைக்கு இ–விசா, நிலையான கட்டண நடைமுறைகள், விசா இல்லா பயணங்கள் போன்ற எளிமையான நடைமுறைகளுக்கு மாறி வரும் நிலையில், ஆசியாவின் மலை நாடான பூடான் மட்டும் முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

“உயர்தரத்துடன் கூடிய சுற்றுலா அனுபவம்” என்பதையே மையமாகக் கொண்ட பூடானின் விசா கொள்கை, உலகிலேயே அதிக செலவு கொண்ட விசா நடைமுறையாக மாறியுள்ளது. எளிய முறையில் சொல்வதானால், பூடானில் சுற்றுலா செல்ல வேண்டுமானால் விசா கட்டணமே மிக உயர்ந்தது என்பதே உண்மை.

பொதுவாக வெளிநாட்டிற்கு பயணம் செய்ய திட்டமிடுபவர்கள், அவர்கள் செலவின் பெரும்பகுதியை விமான டிக்கெட் எடுப்பதற்காகவே பயன்படுத்துவார்கள். ஆனால் பூடானுக்கான பயணத்தில், விமானக் கட்டணம் தடுப்பினாலும், நாட்டுக்குள் நுழைவதற்கான கட்டணமே பயணச் செலவில் மிகப் பெரும் இடத்தை பிடிக்கிறது.

இதற்கு காரணம், பூடானின் சுற்றுலா கொள்கையின் மையமாக உள்ள நிலையான மேம்பாட்டு கட்டணம் (Sustainable Development Fee – SDF) ஆகும்.

இந்தியா, பங்களாதேஷ், மாலைத்தீவு ஆகிய நாடுகளைத் தவிர்த்து, பிற நாடுகளின் பயணிகள் பூடானில் நுழைய ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு USD 100 என்ற SDF கட்டணத்தை கட்ட வேண்டியுள்ளது.

முன்பு USD 200 இருந்த இந்த கட்டணம் சமீபத்தில் பாதியாகக் குறைக்கப்பட்டாலும், ஒரு இரவுக்கு USD 100 என்பது பல நேரங்களில் தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை பயணச் செலவுகளை விட கூட அதிகமாக உள்ளது.

இதுவே பூடானுக்கு சுற்றுலா செல்வதை உலகின் மிகச் செலவான அனுபவங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளது.

பூடான் இந்த SDF மூலம் வசூலிக்கப்படும் பணத்தை தனது இயற்கை வளங்களையும், நாட்டின் பசுமை சூழலையும் பாதுகாக்கவும், நீடித்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் பயன்படுத்துகிறது.

இந்த உயர்ந்த கட்டணம், வெகுஜன சுற்றுலா காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கவும் உதவுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!