விலையேற்றத்தால் உணவு பழக்கங்களை மாற்றிய கனேடியர்கள் அதிர்ச்சி தகவல்

கனடாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் விலைவாசி அழுத்தம், அந்நாட்டில் மக்களின் உணவு வாங்கும் பழக்கங்களை பெரிதும் மாற்றி வருகிறது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

நவம்பர் 21, 2025 - 20:34
விலையேற்றத்தால் உணவு பழக்கங்களை மாற்றிய கனேடியர்கள் அதிர்ச்சி தகவல்

கனடாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் விலைவாசி அழுத்தம், அந்நாட்டில் மக்களின் உணவு வாங்கும் பழக்கங்களை பெரிதும் மாற்றி வருகிறது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்திற்கு முன்பு உணவுப்பொருட்கள் வாங்கும்போது காலாவதி தேதியை முன்னுரிமையாகக் கணித்திருந்த பலர், தற்போது எந்தப் பொருள் விலைகுறைவாக உள்ளது என்பதையே முக்கியமாக கவனிக்க தொடங்கி விட்டனர்.

Dalhousie பல்கலைக்கழகம் மற்றும் Caddle என்ற ஆன்லைன் தரவுத்தள நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 80% பேர், தங்களுக்குப் பெரும் நிதிசுமையை ஏற்படுத்துவது உணவுப் பொருட்களின் விலையே என குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாதிபேர், விலையேற்றத்தால் தாங்கள் உணவு வாங்கும் முறையை மாற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தள்ளுபடி விலைப் பொருட்களைத் தேர்வு செய்வது, கூப்பன்கள் பயன்படுத்துவது, மற்றும் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கும் ஆன்லைன் தளங்களில் வாங்குவது போன்ற பழக்க வழக்கங்கள் அதிகரித்துள்ளன.

செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக பலர் உணவகங்களில் சென்று சாப்பிடுவதை குறைத்து, வீட்டிலேயே சமையல் செய்து உண்ணும் பழக்கத்துக்கு மாறி உள்ளனர். அதேசமயம், எந்த பிராண்ட் குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதைக் கவனித்து வாங்குவது, மற்றும் ஐஸ்கிரீம், மாமிசம், பழங்கள் போன்ற சில உணவுப் பொருட்களை வாங்குவதில் குறைப்பும் ஏற்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!