அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களுக்கு என்ன நடக்கிறது? வெளியான தகவல்!

விண்ணப்பங்களில் 84 சதவீதமானவற்றை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மே 15, 2024 - 11:05
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களுக்கு என்ன நடக்கிறது? வெளியான தகவல்!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

குறித்த விண்ணப்பங்களில் 84 சதவீதமானவற்றை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அஸ்வெசும கொடுப்பனவு செயற்பாட்டில் புதிதாக நியமனம் பெற்றுள்ள 2000 கிராம அலுவலர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விண்ணப்ப பரிசீலனை, கணனியில் தரவேற்றுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பினருக்கான கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவைப்பத்திரமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!