வெள்ளி ஆபரணம் அணிந்தால், எந்த ராசிக்கு அதிஷ்டம் தெரியுமா?

தங்கத்தை அணிவது போன்று வெள்ளி நகையை அணிந்து கொள்ளவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மே 30, 2024 - 14:16
வெள்ளி ஆபரணம் அணிந்தால், எந்த ராசிக்கு அதிஷ்டம் தெரியுமா?

தங்கத்தை அணிவது போன்று வெள்ளி நகையை அணிந்து கொள்ளவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆண்களை விட பெண்களே வெள்ளி நகைகளை அதிகளவில் அணிகின்றனர். ஜோதிடப்படி சிலருக்கு வெள்ளி பொருள்களையும், ஆபரணங்களையும் அணிவது அசுபமான செயலாக பார்க்கப்படுகிறது.

ஜோதிடப்படி வெள்ளி என்பது சந்திரன் மற்றும் சுக்கிரனின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த பதிவில், வெள்ளி ஆபரணம் எந்த ராசிக்கு ஏற்றது என்பதை பார்க்கலாம்.

கடகம்

கடக ராசியினர் வெள்ளி ஆபரணங்களை அணிந்து கொள்வது மிகவும் நல்லதாகும். இவ்வாறு அணிவதால், மன கட்டுப்பாடு, மனநலம் சார்ந்த பிரச்சினையிலிருந்து வெளிவரலாம். மிக அதிகமாக சிந்திக்கக்கூடியவர்கள் மட்டுமின்றி உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கும் கடக ராசியினர் வெள்ளி நகை அணிந்தால் உணர்ச்சியை கட்டுப்படுத்தலாம். வெள்ளி அணிவதால் உடல்நலமும் ஆரோக்கியமடைவீர்கள்.

துலாம்

துலாம் ராசியினரின் அதிபதி சுக்கிரன் என்று ஜோதிடத்தில் நம்பப்படும் நிலையில், இவர்களின் சிந்தனையே வித்தியாசமாக இருக்கும். பல நேரங்களில் கைக்கூடாமல் போகும் நிலையில், வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் உங்களது சிந்தனை சரியான பாதையில் செல்வதுடன், பிரச்சனை தீர்ந்து, உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் பண பிரச்சனை, குடும்ப பிரச்சனைகளும் தீரும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு வெள்ளி ஆபரணங்களை அணிவது மிகுந்த நன்மையை அளிக்கும். இவர்களன் கோபம் கட்டுக்குள் வரும் என்றும் நம்பப்படுகின்றது. மேலும், யாருடைய பிரச்னையிலும் தலையிடாத இவர்கள், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். கடினமாக உழைத்தாலும் வாழ்வில் முன்னேற்றம் இல்லை என்றால் வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் அதிர்ஷ்டம் இவர்கள் பக்கம் நிச்சயம் இருக்கும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!