அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் குறித்த வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஜுலை 13, 2024 - 21:00
அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து  திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் 070 3500 525 என்ற whatsapp இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என, அதன் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்தார். 

அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் குறித்த வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!