மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு, மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு, மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல, களுத்துறை மாவட்டத்தின் ஹொரண, மத்துகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று (16) இரவு 7.30 மணி முதல் இன்று இரவு 7.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.