சிறைச்சாலையை விடுவிக்க இராணுவ நடவடிக்கை - எங்கு தெரியுமா?
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் கையகப்படுத்தப்பட்ட சிறைச்சாலையை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையை வெனிசுலா இராணுவம் ஆரம்பித்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் கையகப்படுத்தப்பட்ட சிறைச்சாலையை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையை வெனிசுலா இராணுவம் ஆரம்பித்துள்ளது.
அந்த நாட்டின் வடபகுதியில் உள்ள சிறைச்சாலை பல வருடங்களாக குற்றவியல் குழுவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிக பரப்பளவில் அமைந்துள்ள இச்சிறையில் தங்கியுள்ள மக்களுக்கு சுதந்திரமாக நடமாடும் வசதி வழங்கப்பட்டதாகவும், இரவு விடுதி, நீச்சல் குளம் மற்றும் சிறிய மிருகக்காட்சிசாலையொன்றும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் வெளியாட்களும் அங்கு வசித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வெனிசுலா அரசாங்கம் 11,000 பேர் கொண்ட இராணுவப் படையை அனுப்பி வைத்துள்ளதுடன், சிறைக் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.