ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதி - அமைச்சரின் அறிவிப்பு
அதிகளவு மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகளவு மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், வாகனங்களை எப்படி இறக்குமதி செய்வது என்பது குறித்து ஆரம்பத்தை கொடுக்க தயாராக உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான குழுவின் அறிக்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.