சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் தொகை 5 பில்லியனுக்கும் மேல் அதிகரிப்பு!
கடந்த ஆண்டு உலகின் மக்கள் தொகை 0.9 சதவீதம் அதிகரித்தது. ஆனால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5.6 சதவீதம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 பில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக கருத்தாய்வு வெளியிடப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் அது சுமார் 62.3 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது.
Meltwater எனும் ஊடகக் கண்காணிப்பு நிறுவனமும் We are Social எனும் சமூக ஊடக நிறுவனமும் இந்தக் கருத்தாய்வை நடத்தின.
பலர் தானியக்கக் கணக்குகளைப் பயன்படுத்துவதாலும் வெவ்வேறு அடையாளங்களில் கணக்குகள் இயங்குவதாலும் துல்லியமான தகவல்கள் கிடைப்பது சிரமம் என்றும் குறித்த நிறுவனங்கள் அறிக்கையிட்டுள்ளன.
கடந்த ஆண்டு உலகின் மக்கள் தொகை 0.9 சதவீதம் அதிகரித்தது.
ஆனால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5.6 சதவீதம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kepios நிறுவனம், ஆய்வு குறித்த புள்ளிவிவரங்களைத் தொகுத்துள்ளது.
அதன்படி, அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களாக
Facebook - 2.19 பில்லியன் பயனாளர்கள்
Instagram - 1.65 பில்லியன் பயனாளர்கள்
TikTok - 1.56 பில்லியன் பயனாளர்கள்
இதேவேளை, Wikipedia தளத்தில் மிக அதிகமாக "ChatGPT" தேடப்பட்டுள்ளது.
இது செயற்கை நுண்ணறிவில் (AI) மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை உணர்த்துவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.