மாணவிகளின் மேலாடையை களைய கூறிய பேராசிரியர் மீது நடவடிக்கை

அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி.யில் தக்கோமா பகுதியில் உள்ள மோண்ட்கோமெரி என்ற கல்லூரியில் படித்து வந்த மாணவிகளில் 11 பேரின் மேலாடையை களையும்படி பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

ஜுலை 4, 2023 - 11:45

கடந்த 2019-ம் ஆண்டு சில்வர் ஸ்பிரிங் கேம்பஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின்போது, மாணவிகளின் மேலாடையை கழற்றி விட்டு விளையாட்டுக்கான உள்ளாடையுடன் இருக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.

இதன்பின் மாணவிகளின் மார்பகங்களை பற்றி முறையற்ற விமர்சனங்களையும் அந்த பேராசிரியர் கூறியுள்ளார். ஆனால், அது மருத்துவ ஆய்வுடன் தொடர்புடையது என அவர் மீது நடந்த விசாரணையின்போது கூறியுள்ளார்.

ஆடைகளை களைய வேண்டிய தேவையோ அல்லது விமர்சனங்களை வெளியிட வேண்டிய தேவையோ இல்லாத சூழலில், சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசி, நடந்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுபற்றி, 3 ஆண்டுகள் துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. கடந்த 3 மாதங்களாக நடந்த தீவிர விசாரணையில், இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. 

சில மாணவிகள் ஆய்வகத்தில் அணியும் மேலாடையை அணிந்து உள்ளனர். அவர்களையும் ஆடைகளை நீக்கும்படி அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பேராசிரியர் விசாரணைக்கு பின்னர் முதலில், விடுமுறை அளிக்கப்பட்டு, பின்பு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால், அவரது பெயர் உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!