ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு
செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் எதிர்ப்புக்கள் ஏற்படக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமது நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், நாட்டில் வசிக்கும் அமெரிக்க பிரஜைகள், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் எதிர்ப்புக்கள் ஏற்படக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமைதியான பொதுக் கூட்டங்கள் கூட முன்னறிவிப்பின்றி வன்முறையாக மாறக்கூடும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.