சில மணி நேரத்திலேயே 1 மில்லியன் Sub; YouTube வரலாற்றில் சாதனை!
இதுவரை 29.9 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரை YouTubeஇல் பின்பற்றுகிறார்கள்.

காற்பந்துப் பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) YouTube பக்கம் தொடங்கிய சில மணி நேரத்தில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
அதாவது, உலகிலேயே மிகக் குறுகிய நேரத்தில் 1 மில்லியன் பேர் ரொனால்டோவின் YouTube பக்கத்தைப் பின்பற்றியுள்ளனர்.
இது YouTube வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இதுவரை 29.9 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரை YouTubeஇல் பின்பற்றுகிறார்கள்.
ரொனால்டோவின் YouTube : https://www.youtube.com/@cristiano
சமூகத் தளத்தில் மிக அதிகமானோர் பின்பற்றும் பிரபலங்களில் ரொனால்டோவும் ஒருவராக மாறியுள்ளார். அதுவம் 24 மணித்தியாளங்களிலேயே இவர் அந்த இலக்கை எட்டியுள்ளார்.
சமூகத் தளங்களில் அவரைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை:
Instagram: 636 மில்லியன்
'X': 112.5 மில்லியன்
Facebook: 170 மில்லியன்
ரொனால்டோ தாம் படைத்த சாதனை குறித்துச் சமூக ஊடகத்தில் வீடியே ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் "இது எனது குடும்பத்துக்குக் கிடைத்த அன்பளிப்பு. அனைவருக்கும் நன்றி," என்று அவர் குறிப்பிட்டார்.