நாட்டின் நன்மைக்காக ஐ.தே.கவுடன் மொட்டு இணையும் - சாகர காரியவசம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் என்பன தமது கட்சிகளின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் நாட்டுக்காக இணைய முடியுமாயின் கட்டாயம் இணையும் என பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உதவியுடன் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார். இதன் காரணமாக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைய தலைமுறையினருக்கான கொள்கையுடன் முன்நோக்கி செல்ல எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க பொதுஜன பெரமுன தயாராக உள்ளது.
இரண்டு கட்சிகளுக்கும் நாட்டின் நன்மைக்கான பொறுப்பு இருக்கின்றது” என சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.