கொழும்பு துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்
BRUNSWICK என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல், நேற்று(11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து நங்கூரமிட்டுள்ளது.

BRUNSWICK என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல், நேற்று(11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து நங்கூரமிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலான ‘Brunswick’ 103 மீட்டர் நீளம் கொண்டதாகும். இதில் 24 கப்பல் பணியாளர் குழுவினர் பயணித்துள்ளனர்.
கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் வருகைதந்துள்ளவர்கள் நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.