கழிவறையை திருடிய 4 பேர் மீது கைது.. இதை கூட திருடுவாங்களானு கேட்காதீங்க...!
உண்மையில், இது பெரிய விஷயம் தான். ஏனென்றால் அது சாதாரண கழிப்பறை இல்லை. முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் ஆகும். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 50 கோடி ரூபாயாகும்.

இந்த உலகம் பல வினோதமான சம்பவங்கள் நிறைந்த ஒரு இடமாகும்.. இப்படி எல்லாம் கூட நடக்க நாம் வாய்ப்பே இல்லை என்று நினைத்தால்.. நிச்சயம் அதுபோன்ற ஒரு சம்பவம் உலகின் ஏதோ ஒரு மூளையில் நடந்திருக்கும். இப்படி உலகெங்கும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
அப்படித்தான் பிரிட்டன் நாட்டில் உள்ள அரண்மனை ஒன்றில் இருந்து டாய்லெட்டை திருடியுள்ளனர். எப்போது இந்தச் சம்பவம் நடந்தது.. அவர்கள் எதற்காக இப்படிச் செய்தார்கள் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உண்மையில், இது பெரிய விஷயம் தான். ஏனென்றால் அது சாதாரண கழிப்பறை இல்லை. முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் ஆகும். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 50 கோடி ரூபாயாகும்.
இதை மவுரிசியோ கட்டெலா என்ற இத்தாலிய கலைஞர் முழுக்க முழுக்க 18 கேரட் தங்கத்தில் வடிவமைத்தார். இதைச் செல்லமாக "அமெரிக்கா" என்றும் அழைப்பார்களாம். மேலும், இது ஏதோ சும்மா காட்சிக்கு வைத்திருக்கும் டாய்லெட் என்றும் நினைக்க வேண்டாம். தங்கத்தில் செய்யப்பட்டாலும் இது வழக்கமாகச் செயல்படும் கழிப்பறையாகவே இருந்துள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான இந்த கழிப்பறை சில காலம் அமெரிக்காவிலும் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த தங்க டாய்லெட் நியூயார்க்கின் குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அப்போது சாதாரண பொதுமக்கள் இதைப் பயன்படுத்தவும் கூட அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்ன மீண்டும் இது பிரிட்டன் நாட்டின் ப்ளென்ஹெய்ம் அரண்மனைக்கு (Blenheim Palace) கொண்டுவரப்பட்டது. அப்போது கடந்த 2019ஆம் ஆண்டில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
கடந்த 2019 செப். மாதம், இந்த தங்க டாய்லெட்டை அடையாளம் தெரியாத சிலர், திட்டம் போட்டுத் திருடினார்கள். நள்ளிரவில் அந்த அரண்மனைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பக்காவாக திட்டமிட்டுக் கொள்ளையடித்துள்ளனர்.
அது வழக்கமாகச் செயல்படும் கழிப்பறை என்பதால் அதில் தண்ணீர் உட்பட அனைத்து இணைப்புகளும் இருந்தன. அதை எல்லாம் கட் செய்து போட்டுவிட்டு அவர்கள் இந்த தங்க டாய்லெட்டை கொள்ளையடித்தனர்.
இந்தச் சம்பவம் அப்போதே உலகெங்கும் பேசுபொருளானது. தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸார், பலரையும் கைது செய்தனர். சில மாதங்கள் கவித்து பொலிஸார் அந்த தங்கக் கழிப்பறையை மீட்டனர்.
கொள்ளையர்கள் அவசர கதியில் கனெக்ஷன்கள் கட் செய்து திருடிச் சென்றதால், அந்த டாய்லெட்டிற்கு தேசமும் ஏற்பட்டிருந்தது. அது ரிப்பேர் செய்து மீண்டும் பொருத்தப்படும் என்று அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கொள்ளை சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 50 கோடி மதிப்பிலான இந்த தங்க டாய்லெட்டை கொள்ளையடித்த விவகாரத்தில் மேலும் 4 பேர் மீது பொலிஸார், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் நான்கு பேரும் வரும் நவம்பர் 28 ஆம் திகதி ஆக்ஸ்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். வழக்கு விசாரணையின் போது தான், அவர்கள் எதற்காக இந்த தங்க டாய்லெட்டை கொள்ளையடித்தார்கள். இதை அவர்கள் எப்படிச் செய்தார்கள். அவர்கள் பிளான் என்னவாக இருந்தது என அனைத்தும் தெரிய வரும். மேலும், இதன் பின்னணியில் வேறு யாராவது உள்ளனரா என்ற கோணத்திலும் பொலிஸார், விசாரணை செய்து வருகிறார்கள்.