பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கை: வன்முறை, உயிரிழப்புகள் அதிகரிப்பு – மனித உரிமை அமைப்புகள் கண்டனம்
பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன்முறையையும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன்முறையையும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன.
Humans for Rights Network தலைமையில், வடபிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை மையமாகக் கொண்ட 17 அகதி மற்றும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து தயாரித்த 176 பக்க அறிக்கை, பிரித்தானியா–பிரான்ஸ் இணைந்து மேற்கொள்ளும் புலம்பெயர்தல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பொலிஸ் வன்முறை, ஆட்கடத்தல்காரர்களின் செயல்கள் மற்றும் மரணங்களுக்கு வழிவகுத்துள்ளதாக குற்றம்சாட்டுகிறது.
பிரித்தானியா, தனது எல்லைகளை பாதுகாப்பதற்காக பிரான்சுக்கு பல மில்லியன் பவுண்டுகள் வழங்கி வருகிறது. இருப்பினும், இந்தக் கொள்கைகள் மரணங்களைத் தடுக்காமல், மாறாக அபாயகரமான நெறிகளை மட்டும் அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Mixed Migration Centre அமைப்பு வெளியிட்ட தகவல்படி, பிரித்தானியாவின் கண்டிப்பான கொள்கைகள் காரணமாக ஆட்கடத்தல் செயல்கள் அதிகரித்துள்ளன. மேலும், பிரித்தானியாவின் கட்டுப்பாடுகளை மீறி, ஆங்கிலக் கால்வாய் வழியாக நுழையும் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது:
கடுமையான இந்தச் சூழலில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 89 பேர் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சிக்கும்போது உயிரிழந்துள்ளனர்.
இந்த அறிக்கைக்கு பதிலளித்த பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், “சிறுபடகுகள் மூலம் நாட்டுக்குள் நுழைவோர் எண்ணிக்கை வெட்கத்துக்குரியது” எனவும், “British people deserve better” (பிரித்தானிய மக்களுக்கு இதைவிட சிறந்தது கிடைக்க வேண்டும்) எனவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை அமைப்புகள் இந்தக் கொள்கைகள் மனிதாபிமானத்தை மீறுகின்றன என வலியுறுத்துவதுடன், பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான புகலிடப் பாதைகளை உருவாக்க வலியுறுத்தி வருகின்றன.