ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை சிறைக் கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை சிறைக் கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அங்கு உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு இவ்வாறு அரச ஆணை மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் 52ஆவது தேசிய தினமான டிசெம்பர் 02 ஆம் திகதியன்று இலங்கைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனை, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அறிவித்துள்ளது.