துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீது வேனில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெவுந்தர பகுதியில் நேற்று (21) இரவு 11.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீது வேனில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், தெவிநுவர கபுகம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நண்பரின் பிறந்தநாள் விழாவை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் வெற்று ரவைகள் மற்றும் தோட்டாக்கள் சிலவும் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வேன், சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் தீ வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் டி-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் மெகசின் ஒன்றும், டி-56 ரவைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தெவிநுவர சின்ஹாசன வீதியைச் சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிது தாருக்க ஆகிய 28 வயதுடைய இரு இளைஞர்களே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இன்று (22) அதிகாலை மாத்தறை மேலதிக நீதவான் மாலன் ஷிரான் ஜயசூரியவினால் நீதவான் விசாரணை நடத்தப்பட்டது.