நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை  சேர்ந்த இருவர் பலி!

புத்தளம் - நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நேற்று (02) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜுலை 3, 2023 - 12:46
நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை  சேர்ந்த இருவர் பலி!

புத்தளம் - நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நேற்று (02) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த 60 மற்றும் 22 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தாவும், பேரனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர்கள் நேற்று மாலை குடும்பஸ்தர்கள் சகிதம் நுரைச்சோலை - இளந்தையடி சவுக்குத் தோட்டத்திற்கு சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த அந்த தாத்தா, அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவரை பாதுகாப்பான முறையில் வெளியே அழைத்துவந்த பாட்டன், மற்றைய இளைஞரையும் மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் செல்ல தயாரான போதே உயிரிழந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய இளைஞனின் சடலம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், ஆலங்குடா கரையோர பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!