கனடாவில் வேலை தருவதாகக் கூறி ஏமாற்றிய இருவர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜுலை 15, 2024 - 17:13
கனடாவில் வேலை தருவதாகக் கூறி ஏமாற்றிய இருவர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கனடாவில் நிதித்துறையில் தொழில் வழங்குவதாக கூறி 10 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்ட போதிலும் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் பணியகத்தில் செய்த முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்த,  பொரளை பிரதேசத்தில் இயங்கும் நிறுவனமொன்றில் விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன்போது, குறித்த நிறுவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த நிறுவன உரிமையாளர் உட்பட மேலும் ஒருவரை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 10 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

---

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!