முடங்கிய டுவிட்டர்... டிரெண்டான ஹாஷ் டேக்.. எலான் மஸ்க் பதிலடி

இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர். 

ஜுலை 2, 2023 - 13:23
முடங்கிய டுவிட்டர்... டிரெண்டான ஹாஷ் டேக்.. எலான் மஸ்க் பதிலடி

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான டுவிட்டரில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர்.

இதற்கிடையே, உலகின் பல்வேறு நாடுகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கியது. இதனால் கோடிக்கணக்கான பயனாளர்கள் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் தவித்தனர்.

இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர். 

இவை டுவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், டுவிட்டர் டவுன் என்ற ஹாஷ் டேக் டிரெண்டிங்கிலும் இடம்பிடித்தது.

இதனையடுத்து, , டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தீவிர அளவில் தேவையற்ற தரவுகளை ஒழிப்பது மற்றும் டுவிட்டரை கையாளுவது ஆகியவற்றுக்காக நாங்கள் தற்காலிக வரம்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இதன்படி, சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும். சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 800 பதிவுகளையும் மற்றும் புதிய சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 400 பதிவுகளையும் படிக்க முடியும் என அறிவித்து உள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!