ரஷ்யாவுக்குப் புதிய தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசனை
ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் தடைகளை விதிக்கப் பரிசீலிப்பதாகத் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

உக்ரேனுடன் அமைதி உடன்பாடு எட்டப்படும் வரை ரஷ்யாவுக்குப் புதிய தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசனை செய்து வருகின்றது.
உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்தனர்.
இந்தநிலையில் ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் தடைகளை விதிக்கப் பரிசீலிப்பதாகத் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.
உளவுத் தகவல்களைப் பகிர்வது உட்பட உக்ரேனுக்கான எல்லா ராணுவ உதவிகளையும் அமெரிக்கா அண்மையில் நிறுத்தி வைத்த பின்னர், ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து இருக்கின்றது.