டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்துமாறு உத்தரவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jan 27, 2024 - 11:11
டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்துமாறு உத்தரவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1990களில் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக  எழுத்தளார் ஈ ஜீன் கேரல் (E. Jean Carroll) சில ஆண்டுகளுக்குமுன் வழக்குத் தொடுத்திருந்தார்.

குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப் சமூக ஊடகங்களில் கேரலுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டார். தம்மை அவதூறு செய்ததாகக் கூறிய கேரல் டிரம்ப்பிடமிருந்து இழப்பீடு கோரினார்.

ஏற்கனவே கேரல் தொடுத்த மற்றொரு அவதூறு வழக்கில் திரு டிரம்ப் 5 மில்லியன் டொலர் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கேரல் யார் என்று தெரியாது என்றும் அவர் வேண்டுமென்றே பொய் சொல்வதாகவும் கூறும் டிரம்ப் மேல்முறையீடு செய்யவிருக்கிறார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...