இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்
2025ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

2025ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
இலங்கை சுற்றுலாப் பணியகம் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டிற்கு வருகை தரும் 3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய எதிர்பார்க்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பிரதான வருமான ஆதாரமாக விளங்கும் சுற்றுலாத்துறை தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டு வருகின்றது.
எதிர்பார்த்தபடி 2024 இல் இலங்கைக்கு வந்த இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய முடிந்தது.
2025 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் 500,000 க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளமை விசேட அம்சமாகும்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை 530,746 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள், 84,476 பேர் அண்டை நாடான இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து 70,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இது தவிர, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன், மார்ச் முதல் 5 நாட்களில் மட்டும் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37,768 ஆகும்.