மீண்டும் உச்சம் பெற்ற தங்கம் விலை... வரலாறு காணாத உயர்வு!

கடந்த 31-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. 

பெப்ரவரி 11, 2025 - 15:17
மீண்டும் உச்சம் பெற்ற தங்கம் விலை... வரலாறு காணாத உயர்வு!

தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) இறுதி வரை ரூ.59 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை காணப்பட்டது. கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

அத்துடன், கடந்த 31-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. 

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை மேலும் அதிகரித்ததுடன், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 என்ற புதிய உச்சத்தில் விற்பனையானது. 

இதனை தொடர்ந்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்துள்ளது. 
இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Tags :

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!