அமெரிக்காவில் தடை செய்யப்படும் TikTok... அடுத்து என்ன?

TikTok நிறுவனத்துக்குத் பைடன் கையெழுத்திட்டதிலிருந்து 270 நாள்கள் அவகாசம் கொடுக்கப்படும். உத்தேசமாக அது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இருக்கலாம்.

ஏப்ரல் 24, 2024 - 17:07
அமெரிக்காவில் தடை செய்யப்படும் TikTok... அடுத்து என்ன?

அமெரிக்க நாடாளுமன்றம் Byte Dance நிறுவனத்துடன் கொண்டுள்ள தொடர்பைத் துண்டித்துக்கொள்ளாவிட்டால் TikTok செயலியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது.

மசோதா ஜனாதிபதி ஜோ பைடனிடம் முன்வைக்கப்படும். அவரும் மசோதாவில் கையெழுத்திட உள்ளதாக கூறியிருக்கிறார்.

TikTok நிறுவனம் சில மாதங்களுக்குள் புதிய உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையேல் அது நிரந்தரமாக அமெரிக்காவில் தடை செய்யப்படும்.

TikTok நிறுவனத்துக்குத் பைடன் கையெழுத்திட்டதிலிருந்து 270 நாள்கள் அவகாசம் கொடுக்கப்படும். உத்தேசமாக அது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இருக்கலாம்.

இந்த நிலையில், குறித்த மசோதாவில் பைடன்  கையெழுத்திட்டால் அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுக்கப்போவதாய் TikTok கூறியிருக்கிறது.

TikTokஇன் உரிமையாளர் Byte Dance சீனாவின் சட்டத்துக்கு உட்பட்ட நிறுவனம். அது விற்கப்படக்கூடாது என்று கூறுகிறது சீன அரசாங்கம்.

TikTok பிரபலமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் வாடிக்கையாளருக்குப் பிடித்தவற்றை முன்னிறுத்தும் அதன் Algorithm எனப்படும் கணக்கீட்டு முறை.

அதனால் சீனா TikTok விற்கப்படக்கூடாது என்று சொல்லும் அல்லது விற்கப்பட்டால் அதன்  Algorithm முறை இல்லாமல் செயலி மட்டுமே விற்கப்படலாம் என்று கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!