முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு: கட்டண விவரம் வெளியானது
மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவிஹத்துள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு
மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவிஹத்துள்ளது.
இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 90 ரூபாய் ஆக குறைக்கப்படும் என கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் லலித் தர்மவிக்கிரம தெரிவித்தார்.
“மேல்மாகாணத்தில் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் அதிகபட்ச கட்டணம் 100 ரூபாய் ஆகும். இரண்டாவது கிலோமீட்டருக்கு கட்டணம் 90 ரூபாய் ஆகும். அத்துடன், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை, இந்த கட்டணங்களில் 15% கூடுதல் கட்டணம் சேர்க்கப்படும். அவர் மேலும் கூறினார்.
அத்துடன்,முச்சக்கர வண்டிக் கட்டணங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின் பொலிஸ், நுகர்வோர் அதிகாரசபை அல்லது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை போன்ற உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறு சங்கத்தின் தலைவர் மேலும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.