கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது
தனியார் மருத்துவ நிறுவனமொன்றில் சிகிச்சை பெற வந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை மீகஹதென்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி மாலை பெலவத்த நகரிலுள்ள தனியார் மருத்துவ நிறுவனமொன்றில் சிகிச்சை பெற வந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரகடுவ, பெலவத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25, 36 மற்றும் 40 வயதுடைய மீகஹதென்ன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (19) மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.