பிரித்தானியாவில் வாகனம் மோதியதில் மூவர் பலி
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரான 31 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரான 31 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
நாட்டிங்ஹாம் பகுதியில் இல்கெஸ்டன் சாலை அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அடுத்த சம்பவம் மில்டன் தெரு பகுதியில், வாகனம் ஒன்று மூவர் மீது மோதிய விவகாரம் தெரிய வந்துள்ளது.
இதன்போது, மக்தலா சாலையில் ஒருவரது சடலம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் என தெரிவித்த பொலிஸார், ஒரே நேரத்தில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.