வெளிநாடொன்றில் கைதான மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை?
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வந்த இந்திய பிரஜைகளான மூவரே, இந்தோனேசியாவின் கடல் எல்லையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரக்கு கப்பலில் 106 கிலோகிராம் “கிரிஸ்டல் மெத்” போதைப் பொருளை கடத்தியதாக அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் மறுத்துள்ளனர்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி கப்பலின் கேப்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் நிகழ்நிலை வாயிலாக குறைந்த நேரமே முன்னிலையாகியதனால் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, இந்தோனேசிய சட்டப்படி மூவரும் மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.