திருடப்பட்ட கடிதங்களை புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த பெண்!
அப்பெண் தனக்கே ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் “Apple AirTag” எனும் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கருவியை அவர் வைத்துள்ளார்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டிற்கு வரும் கடிதங்கள் சில நாள்களாகத் திருடப்பட்டு வந்துள்ளன.
திருடியது யார் என்று தெரியவில்லை. இதனால் திருடர்களை அவரே கண்டுபிடிக்கத் திட்டம் தீட்டியுள்ளார்.
திருடர்களுக்கும் பெண்ணுக்கு நேரடித் தொடர்பு இல்லாத நிலையிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புத்திசாலித்தனமாக திருடர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்து, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
அது எப்படியென்றால், அப்பெண் தனக்கே ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் “Apple AirTag” எனும் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கருவியை அவர் வைத்துள்ளார்.
இந்நிலையில், Apple AirTag இருக்கும் கடிதம் திருடப்பட்டபோது திருடர்களின் இருப்பிடம் பற்றிய தகவல் பெண்ணுக்குக் கிடைத்தது. அவர்கள், Santa Maria எனும் நகரில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பொலிஸாரின் உதவியுடன், சந்தேகத்திற்குரிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து மேலும் 12 பேரின் கடிதங்களும் பொலிஸாரால் கைப்பட்டப்பட்டன.
அவர்கள் மீது அடையாளத் திருட்டு, Credit Card திருட்டு, மோசடி போன்ற பல குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களைப் பிடிக்க உதவிய பெண்ணின் புத்திசாலித்தனத்தை பொலிஸார் பாராட்டினர்.