50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் யோசனை அமைச்சரவைக்கு
நிதி அமைச்சின் அவதானிப்புகளுக்காக இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள

இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் முன்வைக்கப்பட்ட 50,000 வீட்டு உரிமை பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை, நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வீட்டு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குவதில் செலுத்த வேண்டிய நொந்தாரிசு கட்டணம் உள்ளிட்ட பிற வரிகளுக்கு செலவிடப்படும் பணம், கருவூலத்தால் ஏற்கப்படும் என்று முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் அவதானிப்புகளுக்காக இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அவதானிப்புகளும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளன.